இலங்கையில் கொரோனாவின் உண்மையான பாரதூரத்தன்மையை பொதுமக்கள் அறிந்துகொள்ளாவண்ணம் தரவுகள் திரிவுபடுத்தப்படுவதாக சந்தேகங்கள் வலுவாக எழுப்பப்பட்டுள்ளன.
இராணுவத்தைச் சேர்ந்த உயர் மட்ட அதிகாரி ஒருவரும் தொற்றுநோயிற் பிரிவைச் சேர்ந்த இரண்டு விசேட நிபுணர்களும் இலங்கையின் கொவிட்-19 தொடர்பான தரவுகளைத் திரிவுபடுத்தி வெளியிட்டுவருவதாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் நேற்றையதினம் வெளியிடப்பட்டன.
அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையாங்கும் தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் முஹமட் முஸாமில் கொரோனா தரவுகள் இலங்கையில் தொடர்ச்சியாக திரிவுபடுத்தப்படுவதாக தகவல் வெளியிட்டார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் உண்மைக்கு மாறாக திரிவுபடுத்தப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நடவடிக்கையில் ஈடுபடும் சந்தேகநபர்களைக் கண்டறிவதற்காக இராணுவத்தளபதியும் கொவிட் தடுப்பிற்கான செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா விசாரணையொன்றை ஆரம்பிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இந்த விபரங்களை சுட்டிக்காட்டி ,கொரோனா பற்றி இலங்கையில் இருந்து வெளியிடப்படும் தரவுகளை உலகின் கொரோனா ஆய்வுப் பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதில் எந்தவிதமான பலனுமில்லை எனப் பதிவிட்டுள்ள
இரஜட்ட பல்கலைக்கழகத்தின் இரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறை விரிவுரையாளர் பேராசிரியர் சுனேத் அகம்போதி நாளாந்தம் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5,000ற்கு அதிகமாக இருக்கும் நிலையில் எண்ணிக்கையை 3,000ற்கு குறைவாகக் காண்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்திலும் இலங்கையில் கொவிட் தொடர்பான தரவுகள் திரிவுபடுத்தப்பட்டமைக்கான சான்றுகளைக் காணமுடிந்ததாக அவர் தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது தினசரி பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை யதார்த்தத்திற்கு புறம்பாக 2000ற்கு குறைவானதாகவே காணப்பட்டதாக பேராசிரியர் அகம்போதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரிகளின் உண்மைக்கு முரணான நடவடிக்கைகாரணமாக கொரோனா தொடர்பான இலங்கையின் தரவுகளின் மீதான நம்பகத்தன்மை மற்றும் பொது சுகாதார அமைச்சின் தரவுகள் தொடர்பான நம்பகத்தன்மை ஆகியவை பெரும் சந்தேகத்திற்கிடமாகியுள்ளதாகவு