முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் நளிந்த கருத்து

0
184
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதிகள் மட்டுமன்றி, அனைத்து குடிமக்களின் பாதுகாப்புக்கும் அரசாங்கம் பொறுப்பேற்கிறது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கும் ஊடக சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதைத் தெரிவித்தார்.

“இங்கே யாருக்கும் விசேடமாக எதையும் செய்யப்போவதில்லை. உயிருடன் உள்ள முன்னாள் ஜனாதிபதிகள் குறித்து பொதுவான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மட்டுமன்றி, நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களும் பாதுகாப்புடன் வாழ அரசு உறுதிபூண்டுள்ளது. இது பாதுகாப்பு சபையில் தொடர்ந்து ஆராயப்படும் விடயமாகும். புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அறிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று  அமைச்சர் கூறினார்.