கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஓகஸ்ட் 31 வரை புதிய சுகாதார வழிகாட்டல்கள்

0
239
Article Top Ad

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய ஓகஸ்ட் 16 முதல் அமுலுக்கு வரும் வகையிலும் ஓகஸ்ட் 31 வரை நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

*வீட்டிலிருந்து வெளியேற: ஒருவருக்கு மாத்திரம் அனுமதி (கடமைக்கு செல்லல், சுகாதார சேவைகளை பெற இது பொருந்தாது)

*பொது போக்குவரத்து: பஸ், புகையிரதங்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய, மாகாண எல்லைக்குள்

*தனியார் வாடகை வாகனங்கள்: கார், முச்சக்கர வண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய, மாகாண எல்லைக்குள்

*மின்சாரம், நீர் உள்ளிட்ட பயன்பாட்டு சேவைகள்: அவசியமான குறைந்தபட்ச ஊழியர்களுடன் மேற்கொள்ள அனுமதி, முடிந்தளவில் வீட்டிலிருந்து பணியாற்ற ஆவணை செய்தல்

*அரச/தனியார் அலுவலகங்கள்: நிறுவன தலைவரின் முடிவுக்கு அமைய குறைந்தபட்ச ஊழியர்கள். வெளி மாகாண ஊழியர்களைப்பது, தலைவரின் முடிவின் அடிப்படையிலானது

*கூட்டங்கள்/ கருத்தரங்குகள்: அனுமதி கிடையாது
மத தலங்கள்: கூட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை

*பொருளாதார மத்திய நிலையங்கள்: மொத்த விற்பனைக்கு மாத்திரம் அனுமதி
பல்பொருள் அங்காடிகள்: ஒரே தடவையில் 25% கொள்ளவின் அடிப்படையில் நுகர்வோருக்கு அனுமதி. (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்)

*வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் : ஒரே தடவையில் 10% கொள்ளவின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி. (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்)
*ஆடையகங்கள்: திறப்பு

*விவசாய அடிப்படையிலான விடயங்கள்: இறுக்கமான சுகாதார வழிகாட்டலுடன் அனுமதி
*பல சரக்கு கடைகள்: ஒரே தடவையில் உச்சபட்சம் 10 பேருக்கு அனுமதி (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்)
*திறந்த சந்தைகள்: ஒரே தடவையில் 25% கொள்ளவு இடவசதியின் அடிப்படையில் நுகர்வோருக்கு அனுமதி. (உள்ளூராட்சி சபைகளின் இறுக்கமான கண்காணிப்பின் கீழ்)
*பேக்கரி/சிகை அலங்கார நிலையங்கள்/ இலத்திரனியல்/மின்சார/ தளபாட/ போட்டோ பிரதி நிலையங்கள்: ஒரே தடவையில் 25% கொள்ளவின் அடிப்படையில் நுகர்வோருக்கு அனுமதி. (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்)
*கைதிகளை பார்வையிடல்: அனுமதி இல்லை
*குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள்: 2 வாரங்களுக்கு பூட்டு
*திருமண வைபவங்கள்: ஓகஸ்ட் 17 வரை அனுமதியில்லை
*மரண வீடுகள்: 24 மணித்தியாலங்களுக்குள்/ உச்சபட்சம் ஒரே தடவையில் 25 பேருக்கு அனுமதி
*நிகழ்வுகள்/ வைபவங்கள்/ கழியாட்டங்கள்: அனுமதியில்லை
*தங்குமிட வீடுகள்: முழுமையாக பயன்படுத்தலாம்/ புதிய நபர்களுக்கு அனுமதியில்லை
*உடற்பயிற்சி? உள்ளக விளையாட்டரங்குகள்: ஓகஸ்ட் 18 முதல் பூட்டு
*சிறுவர் பூங்காக்கள்/உடல் பிடித்து விடும் நிலையங்கள்/ நீச்சல் தடாகங்கள்: ஓகஸ்ட் 18 முதல் பூட்டு
*நடை பாதைகள்: தனித்தனியாக நடப்பதற்கு அனுமதி
*கடற்கரை: ஒன்றுகூட அனுமதியில்லை
உணவகங்கள்: 50% ஆசனங்களில் அமர்ந்து உண்ண அனுமதி
*ஹோட்டல்/ ஓய்வு இல்லங்கள்/ தங்குமிட இல்லங்கள்: 25% கொள்ளளவின் அடிப்படையில் திறக்க அனுமதி
*பல் வர்த்தக நிலைய கட்டடத் தொகுதிகள் (Shopping Malls): 25% கொள்ளளவின் அடிப்படையில் திறக்க அனுமதி (அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும்) (சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் திருத்தப்பட்டுள்ளது)