ஆத்தரப்படுத்தினாலும் அமைதிகாத்துக்கொள்ளுங்கள்- மாவனல்லை தஸ்லிம் விடுக்கும் வேண்டுகோள்

0
183
Article Top Ad

அநீதிகளை இழைத்து நாசகார தரப்பு ஆத்திரப்படுத்தினாலும் சிறுபான்மையினர் அமைதிகாத்து நடக்க வேண்டும் என மாவனல்லை மொஹமட் தஸ்லிம் வேண்டுகோள் விடுக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பான காலப்பகுதியில் மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு உட்பட முக்கிய தகவல்களை வழங்கியமைக்காக பொலிஸ் திணைக்களத்தால் 25 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்பட்ட நிலையில் குளோப் தமிழுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் தகவல் வழங்கியமை காரணமாக பயங்கரவாதிகளின் மிலேச்ச துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உடல் ஊனமுற்ற மொஹமட் ராசிக் மொஹமட் தஸ்லீமுக்கு ரூபா 25 இலட்சம் பணப் பரிசு இன்று வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை வழங்கியமை தொடர்பில் ஶ்ரீ லங்கா பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட குறித்த பரிசுத் தொகையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் மற்றும் பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.