இலங்கையில் மூன்று நாட்களில் மாத்திரம் 600 க்கு அதிக உயிர்கள் கொரோனாவால் பலி

0
294
Article Top Ad

கொரோனா காரணமாக நேற்றையதினமும் 212 பேர் உயிரிழந்துள்ளமை இன்று உறுதிசெய்யப்பட்டநிலையில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் இலங்கையில் 200ற்கு மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

21 மில்லியன்களே கொண்டுள்ள இலங்கையில் ஒரேநாளில் 200ற்கு மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகின்றநிலையில் இதனை  இந்தியாவின் தற்போதைய  1366 மில்லியன்சனத்தொகையின் படி பார்ப்பின் அங்கு 14.000 ற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதற்கு சமனாகும்.

இந்தியாவில் கொரோனா உச்சம் பெற்றிருந்த மே ஜுன் காலப்பகுதியில் கூட அதிக பட்சமாக ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6100 ஆக  மாத்திரமே இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களை எப்படித்தவிர்க்கமுடியும் என
இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் டொக்டர் பத்மா குணரத்ன கருத்துவெளியிட்டுள்ளார்.

கொழும்பில் 100 வீதம் டெல்டா வைரஸ் தாக்கமே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் பரவி வரும் டெல்டா மாறுப்பட்ட பிறழ்வானது, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்

இலங்கையை செப்டம்பர் மாதம் 18ம் திகதி வரை மூடினால், சுமார் 7,500 உயிர்களை காப்பாற்ற முடியும் என டொக்டர் பத்மா குணரத்ன குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று,எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி வரை நாட்டை மூடினால் மேலதிகமாக 10,000 உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்படும் பட்சத்தில் மாத்திரமே நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் டொக்டர் பத்மா குணரத்ன குறிப்பிடுகின்றார்.