SVAT வரி நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தும் – IMF பிரதிநிதிகளிடம் தெரிவித்தார் சஜித்

0
69
Article Top Ad

SVAT வரியை நிறுத்துவதானது, நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என IMF பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதனால், SVAT வரியை இரத்துச் செய்யும் நடவடிக்கையை நிறுத்துமாறும் ஏற்றுமதி துறைக்கு நன்மை பயக்கும் மாற்று நடவடிக்கைகளை முன்மொழியுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியபோது இவ்வியங்களை தெரிவித்துள்ளார்.

SVAT வரி ரத்து செய்யப்பட்ட பின்னர், ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் எந்த மாற்றுத் திட்டத்தையும் முன்வைக்கவோ முன்மொழியவோ இல்லை எனக் குறிப்பிட்டுள்ள சஜித், நாட்டில் முதலீடு, சேமிப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் இல்லாததால், நாட்டின் சுமார் 50% மக்கள் ஏழ்மை நிலைக்கு வந்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் உரிமையாளர்களுக்கு பராட்டே சட்டம் அமுல்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை, கடன் மறுசீரமைப்பு மற்றும் வட்டி தள்ளுபடி திட்டங்களின் இல்லாத நிலையைத் IMF பிரதிநிதிகளுக்கு விளக்கியுள்ளார்.

IMF செயன்முறை வழியாக, நாட்டின் மக்கள் எதிர்கொள்கின்ற சமூக பிரச்சினைகளை சமாளிக்க, மக்களுக்கு நிவாரணம் மற்றும் பக்கபலத்தை வழங்கும் பயனுள்ள இணக்கப்பாடுகள் அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.