இலங்கை பற்றிய தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றம்

0
88
Article Top Ad

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான A/HRC/60/L.1/Rev.1 என்ற தீர்மானம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், நேற்றை தினம் வாக்கெடுப்பின்றி இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரித்தானியா தலைமையில் இந்த பிரேரணை சமர்ப்பிப்பட்டது.

இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் (OHCHR) அலுவலகத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் திருத்தப்பட்ட ஐ.நா. தீர்மானத்திற்கு 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன. குறித்த புதுப்பிக்கப்பட்ட வரைவு ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா உள்ளிட்ட நாடுகள் பிரதானமாக அனுசரணை வழங்கின.