NMRA தரவுகள் அழிந்தமை தொடர்பில் அதனை நிர்வகித்த நிறுவனத்தின் CEO கைது

0
406
Article Top Ad

 

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) தரவுகள் அழிந்தமை தொடர்பில், அதனை நிர்வகித்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Epic Lanka Technologies நிறுவனமே குறித்த தரவு தளத்தை பேணிய நிலையில், அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி தரீந்திர கல்பகே குற்றப் புலாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

NMRA இற்குச் உரித்தான முக்கிய தரவுகள் கொண்ட கோப்புகள் பல அழிந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த ஜூலை மாதம் அழிக்கப்பட்டமை அறிய வந்துள்ளது.

ஆயினும் குறித்த தரவுகள் மீண்டும் கடந்த செப்டெம்பர் 04ஆம் திகதி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையானது, இலங்கையில் மருத்துவ சாதனங்கள், மருந்துகள், மருந்தகங்கள் தொடர்பில் அனுமதிப்பத்திரம் வழங்கும் அரச நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தரவுகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.