ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்த விடயங்களுக்கு பிரித்தானியா ஆதரவு

0
234
Article Top Ad

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பிரித்தானியா வழிமொழிவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமையை தமது ட்விட்டர் பதிவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதை தாம் தொடர்ந்தும் வலியுறுத்துவதாக சாரா ஹல்டன் மேலும் தெரிவித்துள்ளார்.