உக்ரைன் – ரஷ்ய போர் ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் – நிதி உதவிகளை அறிவித்துள்ள பிரிட்டன்

0
28
Article Top Ad

உக்ரைன் – ரஷ்ய போர் ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் மீள் எழுச்சிக்கும், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு 55.7 மில்லயின் பவுண்ட்கள் உட்பட பல்வேறு உதவிகளை பிரதமர் கியர்  கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் இந்த உதவிகள் மூலம் உக்ரைன் அதன் போர் திறனை வளர்த்துக்கொள்ளவும், இராணுவ மற்றும் விமான பயிற்சிகளை அதிகரித்துக்கொள்ளவும் முடியும் என  அரசாங்கம் கூறியுள்ளது.

உக்ரைனில் டிரஷ்ய படையெடுப்பு இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவை ஒட்டி விசேட நினைவு செலுத்தும் நிகழ்வொன்று கியே நகரில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் யெவெட் கூப்பர் கலந்துகொள்ள உள்ளார்.

அதற்கு முன்னதாக அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியட்டுள்ளது.

அரசாங்கத்தின் அறிவிப்பின் பிரகாரம்,

உக்ரைனின் எரிசக்தி கட்டத்தைப் பாதுகாக்கவும், சரிசெய்யவும், கூடுதல் உற்பத்தி திறனை வழங்கவும் அவசர எரிசக்தி ஆதரவுக்காக 20 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மோதலின் முன்னணியில் உள்ள சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு 5.7 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், உக்ரைனின் சமூக மீள்தன்மையை ஆதரிக்கவும், ரஷ்யாவின் போர்க்குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை மேற்கொள்ளவும் 30 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், உக்ரைனிய விமானிகளுக்கு பிரித்தானியாவில் பயிற்சி வழங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.