சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அண்மையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவருக்கு இடது தொடை தசை நார் காயமடைந்துள்ளதாகவும், இதில் இருந்து குணமடைய ஆறு முதல் 12 வாரங்கள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ் மாத்ரே, முதல் ஆறு போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 177.88 ஸ்ட்ரைக் ரேட்டில், 33.50 சராசரியில் 201 ஓட்டங்களை குவித்திருந்தார்.
சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற ஆயுஷ் மாத்ரேவின் துடுப்பாட்ட முக்கிய காரணமாகும்.
இறுதியாக விளையாடியப் போட்டியிலும் 13 பந்துகளில் 30 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இந்நிலையில், மாத்ரேவிற்கு பதிலாக மாற்று வீரரை தெரிவு செய்ய சென்னை அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் வேகப் பந்து வீச்சாளர் கலீல் அகமது தொடரில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில், தற்போது ஆயுஷ் மாத்ரே தொடரில் இருந்து விலகியுள்ளமை சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.

