Article Top Ad
புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட பின்னர் , வேல்ஸ் இளவரசி கேத்தரின் (Catherine) தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை இத்தாலிக்கு மேற்கொள்ள உள்ளார்.
இத்தாலியின் ரெஜியோ எமிலியா (Reggio Emilia) நகரத்திற்கு அவர் இன்று பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அவரது மீட்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
ஆரம்பகாலக் கற்றலில் ரெஜியோ எமிலியா நகரம் ஒரு தனித்துவமான மற்றும் உலகப் புகழ்பெற்ற அணுகுமுறையைக் கொண்டுள்ளதால், அதுகுறித்து ஆய்வுகளை நடத்த இளவரசி திட்டமிட்டுள்ளார்.
இத்தாலிப் பயணத்தைத் தொடர்ந்து, குழந்தைகளின் வளர்ச்சிக்காகப் புதிய திட்டங்களை உருவாக்கியுள்ள உலகின் ஏனைய நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

