பொலிஸ் சிறைகூடத்தில் உயிரிழந்தமை தொடர்பாக பொலிஸார் இருவர் பணி இடைநீக்கம்

0
152
Article Top Ad

பனாமுர பொலிஸ் நிலையத்தின் சிறை கூடத்திற்குள் இளைஞர் ஒருவர் உயிரிழந்த தொடர்பாக சம்பவம் இடம்பெற்றபோது பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸார் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்திற்கு நீதி கோரி பிரதேச மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடும்ப தகராறு காரணமாக மனைவியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய 38 வயதான இளைஞர் ஒருவர் பனாமுர பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனின் சடலம் சிறைக்கூடத்திற்குள் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த இளைஞனின் உயிரிழப்புக்கு பொலிஸாரே காரணம் எனக் கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பனாமுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு அதிகாரிகள் தற்காலிகமோக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனே பொலிஸாரின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே பாராளுமன்றத்தில் இன்று (17) குற்றஞ்சுமத்தினார்.

இதற்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சம்பவம் நடைபெற்றபோது கடமையில் இருந்த பொலிஸார் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்