‘மொட்டு’ அரசிலிருந்து மைத்திரி அணி வெளியேறுவதால் பிரச்சினை இல்லை இராஜாங்க அமைச்சர் ரொஷான் சபையில் கடுந்தொனியில் பதிலடி

0
222
Article Top Ad

 

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினால் எமக்குப் பரவாயில்லை. எவ்வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை.”

– இவ்வாறு இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் நேற்று வெளியிட்ட கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதத்திலேயே ரொஷான் ரணசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எனக்கு கோள்மூட்டும் அரசியல் செய்ய தெரியாது. மைத்திரி தரப்புக்கு அது பழக்கமாக இருக்கலாம். தங்கள் அடி ‘வேறு மாதிரி’ இருக்கும் என மைத்திரி சொன்னார். சஹ்ரானின் அடியை நாம் பார்த்தோம். மீண்டும் அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறக்கூடாது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அதேபோல் அக்கட்சியில் இருந்து உறுப்பினர்கள் சிலர் வெளியேறுவதால் சிக்கலும் இல்லை” – என்றார்.