உலகின் முன்னணி செல்வந்தர்களின் செல்வம் மேலும் அதிகரிப்பு

0
193
Article Top Ad

உலகின் மொத்த செல்வத்தில் பணக்காரர்களின் பங்கு கொவிட்–19 காலகட்டத்தில் இதுவரை இல்லாத வேகத்தில் அதிகரித்திருப்பதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

1995இல் உலக செல்வத்தில் செல்வந்தர்கள் வகித்த பங்கு ஒரு வீதமாக இருந்தது. அது தற்போது 3 வீதத்திற்கு அதிகரித்திருப்பதாக சமத்துவமின்மை குறித்த உலக அறிக்கை குறிப்பிட்டது.

2020இல் அது மிக வேகமாக உயர்ந்ததாக அறிக்கை தெரிவித்தது.

கொவிட் நோய்த்தொற்றால் உலகம் பாதிக்கப்பட்ட 18 மாதங்களில் ஏற்றத்தாழ்வு பன்மடங்கு அதிகரித்ததாக அறிக்கையை வெளியிட்ட அமைப்பின் இணை பணிப்பாளர் தெரிவித்தார்.

பணக்காரர்களின் செல்வம் சுமார் 4 டிரில்லியன் டொலருக்கு உயர்ந்துள்ளது.

அதே வேளையில் உலகில் உள்ள மேலும் 100 மில்லியன் பேர் மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

போர்ப்ஸ் சஞ்சிகை அண்மையில் வெளியிட்ட விபரங்களின்படி, உலகின் 10 மிகப் பெரிய பணக்காரர்கள் ஒவ்வொருவரின் சொத்து மதிப்பும் 100 பில்லியன் டொலருக்கு அதிகமாக இருந்தது.

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் இலோன் மஸ்க் உலகின் பெரும் பணக்காரராக 265 பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டுள்ளார்.