நோபல் பரிசு பெற்ற தென்ஆப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

0
215
Article Top Ad

நிறவெறி எதிர்ப்பின் அடையாளமான நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தில் கருப்பின மக்கள் மீதான அடுக்கு முறைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் போராட்டம் நடத்தியவர்களில் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு குறிப்பிடத்தக்க நபர் ஆவார்.

தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியவரும் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு நேற்று காலமானார். அவருக்கு வயது 90.

நிறவெறி எதிர்ப்பின் அடையாளமான நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தில் கருப்பின மக்கள் மீதான அடுக்கு முறைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் போராட்டம் நடத்தியவர்களில் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு குறிப்பிடத்தக்க நபர் ஆவார்.

நிறவெறி முறையை ஒழிப்பதற்கான போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்கிற்காக 1984-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தென்ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்றபோது தென்ஆப்பிரிக்காவை வானவில் தேசம் என வர்ணித்து, பிரபலப்படுத்தியவர் டெஸ்மண்ட் டுட்டு.

டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவு குறித்து தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா ‘நீண்ட காலம் போராடி நாட்டுக்கு விடுதலை பெற்று தந்த சிறந்த ஒருவருக்கு பிரியாவிடை அளிக்கும் தருணம் இது’ என கூறியுள்ளார்.