திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் மூன்று குத்தகை ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட இலங்கை தீர்மானம்

0
243
Article Top Ad

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கடந்த 16 மாதங்களாக ராஜபக்ஸ அரசாங்கம் நடத்திய பொருத்தமான பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்தியாவுடன் மூன்று குத்தகை ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட தீர்மானித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பானுடன் செய்திருந்த முத்தரப்பு ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்த நிலையில் விரிசல்கண்ட இலங்கையுடனான இராஜதந்திர உறவை முன்னோக்கி நகர்த்துவதற்கு நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுவந்த திட்டத்திற்கு பச்சைக் கொடி காண்பிக்கப்பட்டிருப்பது இந்தியாவிற்கு அனுகூலமாக அமைந்துள்ளது.

எரிசக்தி அமைச்சில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ,LIOC பராமரிக்கும் 14 திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளையும் மேலும் 50 வருடங்களுக்கு அவர்களுக்கே குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நேரடியாக 24 தாங்கிகளும் CPC இன் கீழுள்ள நிறுவனத்தின் ஊடாக 61 தாங்கிகளும் என மொத்தமாகவுள்ள 99 தாங்கிகளில் 85 தாங்கிகளை தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் 14 தாங்கிகள் மாத்திரமே இலங்கை IOCயின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் புதிதாக நிறுவப்பட்ட Trinco Petroleum Terminals Ltd மற்றும் LIOC உடன் இணைந்து, மேலும் 61 தாங்கிகளை நிர்வகிக்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் அதன் 61 தாங்கிகளின் 51% ஆனவை Trinco Petroleum Terminals Ltd (CPC) இனாலும் அதன் 49% LIOC  இனாலும் நிர்வகிக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் எமது அரசாங்கத்தினால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை, மீண்டும் எம்மால் பெறமுடிந்துள்ளது. தற்போது இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வெற்றிகரமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இது சாத்தியமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கியை இந்தியாவுடன் மாத்திரம் கூட்டாக அபிவிருத்தி செய்ய  1987 ஜூலை 29ஆம் திகதி உடன்பாடு எட்டப்பட்டது.

ஆயினும் 2003 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில், எண்ணெய்த் தாங்கிகள் 99 இனையும் 35 வருடத்திற்கு வழங்கும் நிலை ஏற்பட்டது.

2017இல் மலிக் சமரவிக்ரம மற்றும் சுஷ்மா சுவராஜ் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இத்தாங்கிகளின் சிலவற்றை LIOC நிறுவனத்திடமிருந்து மேலதிக குத்தகை பெற முயற்சி செய்த போதிலும் அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை.

நாம் தற்போது இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாட்டுக்கு அமைய, திருகோணமலை 99 தாங்கிகளில் 24 இனை இலங்கை அரசாங்கத்தினால் இலங்கை பெற்றோலியத்திடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் 1987 இல் கூட்டாக இணைந்து எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கையைத் தாண்டி, 24 தாங்கிகள் மீட்கப்பட்டுள்ளது.

LIOC பராமரிக்கும் 14 திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளையும் மேலும் 50 வருடங்களுக்கு அவர்களுக்கே குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அதன் 61 தாங்கிகளின் 51% ஆனவை Trinco Petroleum Terminals Ltd (CPC) இனாலும் அதன் 49% LIOC  இனாலும் நிர்வகிக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.

Trinco Petroleum Terminals Ltd நிறுவனமானது, பெற்றோலிய நிறுவனத்துடன் இணைந்த நிறுவனம் என்பதுடன், அதன் பெரும்பலான பங்குகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமானது என்பதுடன், அதிலுள்ள 7 பணிப்பாளர்களில் 4 பேர் மற்றும் அதன் தலைவர் ஆகியோர் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நியமிக்கப்படுவர்.

அத்துடன் Trinco Petroleum Terminals Ltd நிறுவனமானது, கணக்காய்வாளரால் கணக்காய்வு செய்யப்படக் கூடிய, பாராளுமன்றத்தின் கோப் குழுவுக்கு பொறுப்புக் கூற வேண்டிய, அதற்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகையில் எம்.பிக்களால் பாராளுமன்றில் கேள்வி எழுப்பக் கூடிய வகையிலான ஒரு நிறுவனமுமாகும் என, உதய கம்மன்பில தெரிவித்தார்.