மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் இன்னமும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது திரையுலகில் மிகவும் பிஸியாகவுள்ள நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே விஜய்யுடன் நடிக்கவுள்ளதாக முன்னர் சமூக வலைத்தளங்களில் நிலவினாலும் இன்று மாலையே படத்தை தயாரிக்கும் சன் ரீவி நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
பூஜா ஹெக்டே 2010 ஆம் ஆண்டு ‘மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா’ என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து புகழ் பெற்றவர். இந்த புகழினை தொடர்ந்து மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, பின்னர் தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார்.
பூஜா ஹெக்டே மும்பை நகரத்தில் உள்ள ஒரு கர்நாடக வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை மஞ்சுநாத் ஹெக்டே மற்றும் தாய் லதா ஹெக்டே ஆகியோர் தங்களின் பிறப்பிடமான மங்களூரில் இருந்து மும்பைக்கு இடம் மாறியுள்ளனர். இவர் கர்நாடகாவில் உள்ள ‘துளு’ என்ற மொழியை பேசுபவர். இருப்பினும் பூஜா ஹெக்டே ஹிந்தி, மராத்தி, ஆங்கில மொழிகளை சரளமாக பேசுகிறார்.
பூஜா ஹெக்டே கல்லூரி படிப்பினை மும்பையில் உள்ள எம்.எம்.கே கல்லூரியில் படித்து தனது இளங்கலை படத்தினை வென்றுள்ளார். பின்னர் கல்லூரி காலத்தில் தோழிகளுடன் மற்ற கல்லூரிகளுக்கு சென்று பல போட்டிகளில் பங்கு பெறுவது மற்றும் மாடெல்லிங் துறையில் பணியாற்றுவது என சில துறைகளில் பணியாற்றி வந்துள்ளார்.
தனது கல்லூரி படிப்பினை முடித்து 2009ம் ஆண்டு ‘மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா’ போட்டியில் பங்கு பெற்ற இவர், சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டார். பின்னர் அடுத்த ஆண்டே அதே போட்டியில் பங்கு பெற்று இரண்டாம் இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
2010-ம் ஆண்டு மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற இவர்இ அந்த ஆண்டே தமிழ் திரைப்பட இயக்குனர் மிஸ்க்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பினை பெற்று திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
இவரின் முதல் படமே தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பூஜா ஹெக்டே. 2012ல் தமிழ் திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய பூஜா ஹெக்டே, பின்னர் ‘ஒக்க லைலா கோசம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகையாக இவர் அறிமுகமாகினாலும், தெலுங்கு திரையுலகில் ஒக்க லைலா கோசம் என்ற திரைப்படம் மூலம் இவருக்கு தெலுங்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகம் பெற்று தெலுங்கு திரையுலகில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து புகழ் பெற்றார்.
தெலுங்கு திரைப்படத்தினை தொடர்ந்து 2016-ம் ஆண்டு ‘மோஹன்ஜோ தாரோ’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்துஇ ஹிந்தி திரையுலகிலும் பெரிய அளவில் பாராட்டப்பட்ட இவர் ஹிந்தியதில் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.