இலங்கை ஆட்சியாளர்கள் அதளபாதாளத்திற்குள் வீழ நேரிடும்- ஐநா தீர்மான நிறைவேற்றத்தையடுத்து சிரேஷ்ட இராஜதந்திரி எச்சரிக்கை

0
489
Article Top Ad

ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்றையதினம் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலஙகையின் ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை என முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் குறிப்பாக முக்கிய ஆட்சியாளர்கள் தற்போது செல்லும் பாதையில் இருந்து பின்நோக்கிய நகராவிட்டால் இதனைவிடவும் கடுமையான விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை புறந்தள்ளி இராணுவத்தினரை முக்கிய பதவிகளுக்கு நியமித்து நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தினரை அதிகமதிகமாக நியமித்து இந்த அரசாங்கம் முன்நகருமாக இருந்தால் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் அதிகாரப்பகிர்வை வலியுறுத்தும் 13வது திருத்தத்தை இல்லாமலாக்க நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் மிகக்கடுமையான விளைவுகளை 2022 ஆண்டு செப்டம்பர் மாத அமர்வின் போது சந்திக்க நேரிடும் என அவர் மேலும் கூறினார்.

ஜெனிவாவில் இன்று அளிக்கப்பட்ட வாக்குகளை வைத்து இலங்கை அரசாங்கம் புதிய வியாக்கியானங்களைக் கொடுத்துவரும் நிலையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை பாரிய பின்னடைவு எனவும் கலாநிதி தயான் ஜயதிலக்க  சுட்டிக்காட்டினார்.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒன்றிணைந்த குழு சமர்ப்பித்த 46/1 தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.

14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவாக ஆர்ஜன்டீனா, ஆர்மேனியா, அவுஸ்திரியா, பஹமாஸ், பிரேசில், பல்கேரியா, ஐவரிகோஸ்ட், செக் குடியரசு, டென்மார்க், பிஜி தீவுகள், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிக்கோ, நெதர்லாந்துஇ போலந்து,கொரியா, உக்ரைன், பிரித்தானியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கு எதிராக பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ்,ரஷ்யா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.

இதேவேளைஇ,இந்தியா, பஹ்ரைன்,புர்கினாஃபசோ, கெமரூன், கெபோன், இந்தோனேசியா, ஜப்பான், லிபியா, மொரிட்டானா, நமீபியா, நேபாளம், செனகல், சூடான், டோகோ ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஒன்றிணைந்த குழு சமர்ப்பித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை ​சீனா கோரியது.

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆறாவது தீர்மானம் இதுவாகும்.

இதேவேளை இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 22 நாடுகள் மாத்திரமே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், 11 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நிலையில், 25 நாடுகள் இந்த பிரேரணை தொடர்பிலான எதிர் நிலைப்பாட்டில் உள்ளமை வௌிப்படையாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரேரணையை கொண்டு வந்த நாடுகளினால் மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமற்போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களினால் நாட்டின் இறையாண்மை மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதாகவும் தமிழ்இ சிங்களஇ முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக உறுப்பு நாடுகள் செயற்பட முடியாது என கூறிய தினேஷ் குணவர்தனஇ அதன் அடிப்படைக் கொள்கைகளை மீறியே ஒருங்கிணைந்த நாடுகள் இலங்கை தொடர்பிலான பிரேரணையை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்