Article Top Ad
புதிய பட்ஜெட் முன்மொழிவுகள் விரைவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்படவுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அரச ஊழியர்களுக்கு 20ஆயிரம் சம்பள உயர்வை புதிய பட்ஜெட்டில் முன்மொழிய பிரதமர் தயாராகி வருவதாக அறியமுடிகிறது.
தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1500 ரூபாவாக அதிகரிக்கவும் அவர் தீர்மானித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட அரச தொழில் முயற்சியின் கீழ் உள்ள ஐந்து நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கும் பிரதமர் தீர்மானித்துள்ளார்.
அத்துடன், புதிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் வெளிநாட்டவர்களுக்கும் நாட்டில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அறியமுடிகிறது.