பாபர் அஸாம் தற்போது உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரா?

0
598
Article Top Ad
பாபர் அஸாம்

தென் ஆபிரிக்காவிற்கு எதிராக அந்த நாட்டில் நடைபெற்ற சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2 ற்கு 1 என்ற அடிப்படையில் இந்த தொடர் வெற்றி அமைந்திருந்தது.

பாகிஸ்தானின் தொடர் வெற்றியில் இரு துடுப்பாட்டவீரர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். ஆரம்பத் துடுப்பாட்ட வீர் ஃபஹர் ஷமான் மற்றும் அணித்தலைவர் பாபர் அஸாம் ஆகியோரே அவ்விருவருமாவர்.

ஃபஹர் ஷமான்

நீண்ட நாட்களுக்கு பின்னர் formற்கு திரும்பிய ஃபஹர் ஷமான் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் முறையே 193 மற்றும் 101 ஓட்டங்களுமாக மொத்தமாக 302 ஓட்டங்களைத் குவித்திருந்தார்.

மறுமுனையில் அணித் தலைவர் பாபர் அஸாம் தொடரில் முதலாவது போட்டியில் 103 ஓட்டங்களைக்குவித்ததுடன் 2வது போட்டியில் 31 ஓட்டங்களைக் குவித்ததுடன் மூன்றாவது போட்டியில் 94 ஓட்டங்களை குவித்திருந்தார். தென் ஆபிரிக்காவிற்கு எதிரான தொடரில் 228 ஓட்டங்களைக் குவித்த பாபர் அஸாம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் தற்போது முதலாம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த தசாப்தத்தின் மிகச்சிறந்த சர்வதேச ஒரு நாள் வீரராக போற்றப்படும் வீராட் ஹோலி 2019ம் ஆண்டில் ஐந்து சதங்களைப் பெற்று தனது ஒட்டுமொத்த சர்வதேச ஒரு நாள் சதங்களின் எண்ணிக்கையை 43 ஆக அதிகரித்ததன் பின்னர் 2020ம் ஆண்டிலும் 2021ம் ஆண்டிலும் இதுவரை சதங்கள் எதனையும் பெறவில்லை.2020ம் ஆண்டில் மொத்தமாக 9 இனிங்ஸ்களில் ஆடியிருந்த வீராட் கோலி ஐந்து அரைச்சதங்களைத் குவித்திருந்தார். இவ்வாண்டில் இதுவரை 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பாபர் அஸாம் 2 அரைச்சதங்களைக் குவித்திருந்தார். இது சாதாரணமாக ஒரு சர்வதேச வீரரால் பெருமைகொள்ளக்கூடிய பெறுபேறாக இருந்தாலும் வீராட் கோலி இதுவரை காண்பித்த ஆற்றல் வெளிப்பாடுகளுடன் ஒப்பிடுகையில் போதாது என்ற கருத்து நிலவுகின்றது.

மறுமுனையில்2020 மற்றும் 2021ல் பாபர் அஸாம் இரண்டு சதங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடைசியாக விளையாடிய 27 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 94 ,31, 103, 125, 77*, 19, 31, 115, 96, 45, 101*, 69, 38, 30, 63, 22, 80, 115, 15, 51, 16, 24, 41*, 69, 12, 49, 92ஓட்டங்களைக் குவித்துள்ளார் பாபர். தற்போது உத்தியோகபூர்வமாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதற்தர துடுப்பாட்டவீரராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார் பாபர் அஸாம்.