ரணிலுடன் கைகோர்த்த 9 கட்சிகள்!

0
169
Article Top Ad

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

இலங்கை மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.விஷ்ணுகாந்தன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் துசுயந்த் மணலங்கம், முற்போக்கு ஜனதா சேவக கட்சியின் உப தலைவர் இந்திக்க சூரியாராச்சி, ஸ்ரீ டெலோவின் பொதுச் செயலாளர் பி.உதயராசா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் என்.குமார குருபவன், ஐக்கிய காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் ஏ.எம். முபாரக், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் இ.தம்பையா, ஐக்கிய இலங்கை முன்னணி சார்பில் அதன் தலைவர் ஜகத் கருணாநாயக்க, இலங்கை ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் தலைவர் எம்.எஸ்.எம்.சாதிக் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டாரவும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டார். மேற்குறிப்பிட்ட கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்த நாடு சார்ந்த அரசியல் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினர். அது கூடிய விரைவில் நடைபெற வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது பூரண ஆதரவை வழங்குவதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

அடுத்த இரண்டு வாரங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவும், பின்னர் பரந்த மற்றும் ஜனரஞ்சகமான அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.