லிபியா பாராளுமன்றத்துக்கு தீ வைப்பு – ஐ.நா. கண்டனம்!

0
158
Article Top Ad

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அதிபர் கடாஃபியின் மறைவுக்குப் பிறகு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, டாப்ரக் நகரில் உள்ள லிபிய பாராளுமன்றத்தைச் சூறையாடிய மக்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், லிபிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.