அடுத்த வாரம் முழுவதும் நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

0
39
Article Top Ad

நாளை 04ஆம் திகதி முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வாரத்தில் இழக்கப்படும் பாடசாலை நேரத்தை எதிர்வரும் பாடசாலை விடுமுறைக் காலத்தில் ஈடுசெய்யவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன் இன்று (03) Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.