தனஞ்சய, வெண்டேசெ ஆகிய வீரர்களுக்கும் கோவிட் தொற்று!

0
240
Article Top Ad

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தனஞ்சய டி சில்வா மற்றும் ஜெஃப்ரி வெண்டேசெ ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இரு வீரர்களுக்கும் கோவிட் -19 சோதனை செய்ததில் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கை தேசிய அணி வீரர்களின் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, நட்சத்திர ஆல்-ரவுண்டர், ஏஞ்சலோ மேத்யூஸ் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தது.