கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஆரம்பம் ; பிரதமர் பதவி குறித்து ஆலோசனை!

0
158
Article Top Ad

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியல் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இடம்பெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற அலுவல் குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.

பிரதமர் பதவிக்கான வேட்புமனுக்கள் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் எட்டியுள்ள ஒருமித்த கருத்து குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான SJB பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்க தீர்மானித்துள்ளது.

தமது வேட்புமனு தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக SJBயின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.