அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அறிவித்துள்ளார்.
இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிப் பிரமாணம் செய்து அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை பதவியில் தொடர்வார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடைமுறைகளை ஆரம்பிப்பதற்காக நாளை (16) பாராளுமன்றம் கூடவுள்ளது.
ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் சில நாட்களுக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஜூலை 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதேவேளை பாராளுமன்றம் வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் அழகப்பெரும இன்று தெரிவித்துள்ளார்.