விறுவிறுப்பாக நடைபெற்ற இந்திய ஜனாதிபதி தேர்தல்!

0
132
Article Top Ad

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இந்தியாவில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து வருகிறார்கள்.

டெல்லியில் எம்.பி.க்கள் வாக்களிப்பதற்காக பாராளுமன்ற வளாகத்தில் அறை எண்.63-ல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிரதமர் மோடி அங்கு 10.05 மணிக்கு வந்தார். முதல் நபராக அவர் அங்கு தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பிறகு எம்.பி.க்கள் ஒவ்வொருவராக வந்து வாக்களித்து வருகிறார்கள். இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.க் களும் அடங்குவார்கள்.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

மொத்த வாக்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெறும் வேட்பாளர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ஆம் திகதி (வியாழன்) காலை டெல்லியில் நடைபெறுகிறது. புதிய ஜனாதிபதி வருகிற 25ஆம் திகதி பதவி ஏற்பார். தற்போதைய சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 60 சதவீதம் ஓட்டு பெற்று அவர் ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது