ஐந்து மாதங்களுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை வழங்கமுடியும்!

0
131
Article Top Ad

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கான தெளிவான வேலைத்திட்டம் தங்களிடம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை பின்பற்றினால் 05 மாதங்களுக்குள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

CNN அலைவரிசையின் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இது தொடர்பில் விளக்கமளித்தார்.