இலங்கைக்கு குறைந்த விலையில் ரஸ்யாவிடமிருந்து எரிபொருள் ; அரசாங்கம் உடன் அக்கறைகொள்ள வேண்டும்!

0
156
Article Top Ad

இரண்டு ரஷ்ய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி சென்றுள்ளனர்.

ரஷ்ய நிறுவனம் இலங்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தயாரித்து கைச்சாத்திட தயாராகவுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதற்கு இலங்கை தரப்பு சம்மதிக்கும் பட்சத்தில் மாதாந்தம் 300 மில்லியன் டொலர் பெறுமதியான கச்சா எண்ணெயை கடனாக வழங்க நிறுவனம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் நிவாரண காலம் முடிந்து ஒரு வருடத்திற்கு இந்த எரிபொருளுக்கான பணத்தை செலுத்த வேண்டும் எனவும், உலக சந்தையில் தற்போதைய விலையை விட குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த நிறுவனத்தின் சட்டபூர்வமான தன்மையைப் பொருட்படுத்தாமல் உரிய கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது என எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் சட்ட திணைக்கள அதிகாரிகள் ரஷ்யவின் பிரேரணைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனை ஆராயக்கூடிய தருணம் இதுவல்ல. எமது நாட்டுக்கு எந்தவளியிலாவது எரிபொருளே தற்போது அவசியமாகவுள்ளது என்றும் அவர் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கூறினார்.