ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மறுமலர்ச்சி நடவடிக்கைகளை நேற்று (28) கொழும்பில் ஆரம்பமாகி அதன் ஆரம்பக்கூட்டத்தை ஆரம்பித்தது.
கண்டி மாவட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பொன்று SLPP கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றதாக SLPP பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலப் போக்கு குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் கண்டி மாவட்ட தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட பலர் கலந்துகொண்டனர்.