பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸுக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

0
161
Article Top Ad

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக லிஸ் ட்ரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ளதற்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் ஊடாக இரு நாடுகளும் தமது பங்காளித்துவத்தை வலுப்படுத்திக் கொள்வதன் மூலம், இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் கலாசார உறவுகள் தொடர்ந்தும் வளரும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.