உலக ஊடக சுதந்திர குறிகாட்டியில் 127ஆவது இடத்தில் இலங்கை;142வது இடத்தில் இந்தியா

0
323
Article Top Ad

2021ம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திர குறிகாட்டியில் இடம்பெற்றுள்ள 180 நாடுகளில் 127வது இடத்தில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவோ மேலும் கீழே 142வது இடத்திலேயே தரப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை கடந்தாண்டிலும் 127வது இடத்திலேயே தரப்படுத்தப்பட்டிருந்தது

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடான சிங்கப்பூரின் ஊடக சுதந்திர நிலை மேலும் மோசமடைந்து கடந்தாண்டைவிடவும் இரண்டு இடங்கள் கீழே சென்று அந்தாடு 160 இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ஊடக சுதந்திரம் மிக மோசமானது என்ற பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நோர்வே பின்லாந்து சுவீடன் மற்றும் டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகள் முறையே முதல் நான்கு இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

முழுமையான அட்டவணையைப் பார்வையிட https://rsf.org/en/ranking_table