இலங்கையின் கொரோனா நிலைமை இந்தியாவைப் போன்று மோசமடைய வாய்ப்பு – எச்சரிக்கின்றது பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம்

0
256
Article Top Ad

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பிசிஆர் மற்றும் எழுந்தமானமான அன்டிஜன் பரிசோதனைகளை நாளொன்றுக்கு 10,000 என்ற அளவிற்கேனும் அதிகரிக்காவிட்டால் இந்தியா தற்போது எதிர்கொண்டிருக்கும் மோசமான கொரோனா நிலைமையையை எதிர்கொள்ளவேண்டிய நிலை உருவாகும் என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தினமும் 2,50,000-இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆறாவது நாளாக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தினமும் இந்தியாவில் இனங்காணப்பட்டுள்ளனர். ஏப்ரல் 5ம் திகதியே முதன் முதலாக இந்தியாவில் ஒரேநாளில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்திருந்தது.

இன்று காலை வரையான 24 மணி நேரத்தில் மட்டும் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர்.