Article Top Ad
USAID நிர்வாகி சமந்தா பவர் இன்று (11) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சுங் மற்றும் USAID பிரதிப் பணிப்பாளர் சோனாலி கோர்டே ஆகியோர் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு 2 நாள் பயணமாக நேற்று வந்த சமந்தா பவர், நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு உரம் மற்றும் பிற முக்கிய விவசாய உள்ளீடுகளை வாங்குவதற்கு உதவுவதற்காக கூடுதலாக 40 மில்லியன் டாலர் வளர்ச்சி நிதி உதவியை அறிவித்தார்.