இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ; சீனாவுக்கு IMF தலைவர் கோரிக்கை!

0
114
Article Top Ad

வளர்ந்து வரும் சந்தை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சனைகளை உக்கிரமடையாமல் தடுக்கும் பொறுப்பு சீனாவிற்கும் மற்ற பெரிய கடனாளிகளுக்கும் உள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் Kristalina Georgieva தெரிவித்தார்.

உலக வளர்ச்சி மையத்தால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் பேசிய ஜார்ஜீவா, வளர்ந்து வரும் சந்தையில் 25% மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 60% கடன் நெருக்கடியில் அல்லது அதற்கு அருகில் இருப்பதாக கூறினார்.

“பெரிய கடன் வழங்குபவர்களுக்கு, சீனாவிற்கு, தனியார் துறைகளுக்கு எனது செய்தி என்னவென்றால், உங்கள் பங்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு பெரியது உங்கள் பொறுப்பு,” என்று அவர் கூறினார். “பிரச்சினை உக்கிரணடைவதை தடுப்பது கடனாளிகளாகிய உங்கள் கையில் உள்ளது.”

குறிப்பாக, இலங்கையின் பொதுக் கடனாளிகள் விரைவாக ஈடுபடுவதையும், பின்னர் தனியார் கடனாளிகளை கடன் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்து வருவதையும் தான் நம்புவதாக ஜோர்ஜீவா கூறினார்.

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் லசார்ட் நிதி ஆலோசனைக் குழு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை இலங்கை அரசாங்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.