அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபுளொய்ட் கடந்தாண்டில் முழங்காலினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யபபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வெள்ளையின பொலிஸ் அதிகாரியான டெரிக் ச்சோவின் Derek Chauvin குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கருப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபுளொய்ட் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் டெரிக் ச்சோவினுக்கு இதுவரை தண்டனை அறிவிக்கப்படவில்லை.
12 பேர் அட ங்கிய ஜீரிக்கள் வழங்கிய தீர்மானத்துக்கு அமைய பொலிஸ் அதிகாரிக்கு 40 வருட கால சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலையுடன் தொடர்புடைய வழக்கு பல வாரங்களாக விசாரணைக்குட்படுத்தப்பட்டது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் 25ஆம் திகதி மினியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஜோர்ஜ் ஃபுளொய்ட் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தின் பின்னர் அமெரிக்காவிலும் உலகின் பல நாடுகளிலும் கருப்பினத்தவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற துன்புறுத்தல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.