ரோமில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கைக்கு விஜயம்!

0
200
Article Top Ad

ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் சின்டி மெக்கெய்ன் எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளை அவர் சந்திக்கும் அதேவேளை, தூதுவர் மெக்கெய்ன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்குடன் இணைந்து பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கைக்கு நிதியளிக்கப்பட்ட மனிதாபிமான திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வுசெய்யவுள்ளார்.