உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க, புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில், ஜனாதிபதி ரணில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருப்பதனை கருத்திற்கொண்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், மனுக்களை தொடர வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.