இந்தியாவில் சுனாமி போன்று கொரோனா கோரத்தாண்டவமாடுவதற்கு வழிகோலிய காரணிகள் எவை?

இரண்டாம் கட்ட கொரோனா அலையால் அதிகரித்துள்ள தொற்றாளர் எண்ணிக்கையும் மரணங்களும் இந்தியாவின் நலிவடைந்த சுகாதாரக் கட்டமைப்பு செயலிழக்கும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. குறைவான பணியாளர்களைக் கொண்ட மருத்துவமனைகள் நோயாளர்களால் நிறைந்துவழிகின்றன. மருத்துவத்திற்கு தேவையான ஒக்ஸிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிதீவிர சிசிச்சைப் பிரிவுகள் நோயாளர்களால் நிறைந்துகாணப்படுகின்றன. ஏறத்தாழ அனைத்து வென்டிலேட்டர் சுவாச உதவிக் கருவிகளும் பயன்பாட்டில் உள்ளன. இறந்தவர்களின் உடலங்கள் சவச்சாலைகளிலும் மயானங்களிலும் குவிந்துகிடக்கின்றன.

0
341
Article Top Ad
புகைப்பட மூலம்: AP

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியவில் 3,14, 835 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது கொரோனா ஆரம்பித்தது முதலாக உலகில் ஒரே நாளில் பதிவான அதிக தொற்றாளர் எண்ணிக்கையாகும்.

இந்தக் காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,104 ஆகும்.

இந்த நிலைமை இந்தியாவில் சுகாதார பாரமரிப்பு நெருக்கடியை ஆழப்படுத்திவிட்டுள்ளதுடன் பயங்கரமான நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது.

ஏறத்தாழ 140 கோடி சனத்தொகையோடு உலகில் இரண்டாவது சனத்தொகை கூடிய நாடாக விளங்கும் இந்தியாவிற்கு அதன் சனத்தொகையும் பராதூரமான கொவிட்-19 சவால்களைத் தோற்றுவித்துள்ளது.

தினமும் 27 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவில் வழங்கப்படுகின்றபோதிலும் சனத்தொகை விசாலமாக இருப்பதால் இன்னமும் 10 குறைவானவர்களுக்கே முதலாவது தடுப்பூசி போட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15.9 மில்லியன்களாக இருக்கின்றது.

இது 32.6 மில்லியன்களுடன் முதலிடத்திலுள்ள அமெரிக்காவிற்கு அடுத்து இரண்டாம் நிலையில் இந்தியாவின் நிலையைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா(583,330) பிரேஸில்381,687ஆகியவற்றிற்கு அடுத்த நிலையில் இந்தியா 184, 657 மரணங்களுடன் மூன்றாம் நிலையில் உள்ளது.

இரண்டாம் கட்ட கொரோனா அலையால் அதிகரித்துள்ள தொற்றாளர் எண்ணிக்கையும் மரணங்களும் இந்தியாவின் நலிவடைந்த சுகாதாரக் கட்டமைப்பு செயலிழக்கும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது.

புகைப்பட மூலம்: Reuters

குறைவான பணியாளர்களைக் கொண்ட மருத்துவமனைகள் நோயாளர்களால் நிறைந்துவழிகின்றன.

மருத்துவத்திற்கு தேவையான ஒக்ஸிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதிதீவிர சிசிச்சைப் பிரிவுகள் நோயாளர்களால் நிறைந்துகாணப்படுகின்றன. ஏறத்தாழ அனைத்து வென்டிலேட்டர் சுவாச உதவிக் கருவிகளும் பயன்பாட்டில் உள்ளன.

இறந்தவர்களின் உடலங்கள் சவச்சாலைகளிலும் மயானங்களிலும் குவிந்துகிடக்கின்றன.

எப்படி இந்தியா இந்த நிலைக்கு சென்றது?

கடந்த செப்டெம்பர் மாதத்தில் இந்தியாவில் தொற்றாளர்கள் எண்ணிக்கை சரிவடையத்தொடங்கியபோது மோசமான கட்டத்தை இந்தியா கடந்துவிட்டது என்ற மாய நம்பிக்கை அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

தொற்றாளர்கள் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் முதல் சுமார் 30 வாரங்களுக்கு வீழ்ச்சியடைந்து கடந்த பெப்ரவரி நடுப்பகுதி முதலாக அதிகரிக்கத்தொடங்கியது.

இந்தியா அதன் சுகாதாரக் கட்டமைப்புக்களை பெருப்பிப்பதற்கும் தடுப்பூசி ஏற்றுதலை அதிகப்படுத்துவதற்குமான சந்தர்ப்பத்தை இந்தியா தவறவிட்டுவிட்டதாக நிபுணர்களை மேற்கோள் காட்டி ஏபி செய்திச் சேவையின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட மூலம்: AP

இந்தியாவின் கொரோனா நிலையை அவதானித்து வந்த அமெரிக்க மிச்சிக்கன் பல்கலைக்கழக உயிரியல் புள்ளிவிபரவியலாளர் பரமார் முகர்ஜி  “நாம் வெற்றிக்கு மிகவும் அருகில் இருந்தோம்” என்கிறார் .

தொற்றுநோய் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஆபத்துக் குறித்த அபாய எச்சரிக்கைகள் இருந்தபோதும்

இதுபோன்ற பாரிய அதிகரிப்பிற்கு இந்தியா தயார்நிலையில் இருக்கவில்லை என்கிறார் இந்தியாவின் பொதுச் சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் கே. சிறிநாத் ரெட்டி.

அரசாங்கத்தின் விமர்சகர்களோ தேர்தல்களையும் இந்து சமய விழாக்களையும் நிறுத்தாமல் முன்கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பாக

சுட்டிக்காட்டுக்கின்ற அதேவேளை இவை நிலைமையை மோசமாகக்க உதவியிருக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

‘ நாடெங்கிலும் அதிகாரிகள் சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை புறந்தள்ளிச் செயற்பட்டனர்’ என்கிறார் ரெட்டி.

கடந்த இரண்டு வாரங்களில் நிலைமை மிகவும் பாரதூரமடைந்துள்ளது. ஏப்ரல் 6ம்திகதியன்று மக்கள் தொகையில் ஒவ்வொரு 100, 000 பேரில் 6.75 பேருக்கு கொரானா தொற்றுள்ளமை இனங்காணப்பட்டது.

இதுவே ஏப்ரல் 20ம்திகதியன்று மக்கள் தொகையில் ஒவ்வொரு 100,000 பேரில் 18.04 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று என்ற அளவிற்கு கடும் அதிகரிப்பை காண்பித்து நிற்கின்றது.

இந்தியாவில் முதலில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் உட்பட புதிய திரிபுகளும் இந்த அதிகரிப்பிற்கு வழிகோலியிருக்கலாம் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தியாவின் அதி உயர் நிலை சுகாதார அதிகாரியான ராஜேஷ் புஷான் ஏன் அதிகாரிகள் சிறப்பாக தயார்ப்படுத்த தவறினர் என்பது குறித்து கருத்துச் சொல்லத் தவறிய போதும்

‘ ஏன் நாம் இதனைத் தவறவிட்டோம் ? நாம் தயாராக இருந்தோமா? போன்ற கேள்விகளை எழுப்பி கடந்த காலம் குறித்து ஆராய இது காலமல்ல என்று குறிப்பிட்டார்.

ஏன் இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு சீர்குலைகின்றது?

இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகச்சிறிய தொகையை சுகாதார கட்டமைப்பிற்காக செலவழிக்கின்றது.

ஏனைய முக்கியமான பொருளாதார சக்திகொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகமிக குறைவாகவே சுகாதார துறைக்காக ஒதுக்குகின்றது.

கடந்த வருடம் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவியபோது அரசாங்கம் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

மருத்துவமனைகள் நிறைந்து வழிவதைத் தடுப்பதற்காக நாடுதழுவிய அளவில் பல மாதகாலமாக முடக்கநிலையை நடைமுறைப்படுத்தியிருந்தது.

இது கோடிக்கணக்கானவர்களிற்கு பெரும் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு வித்திட்டிருந்தது.

கடந்தாண்டில் கொரோனா தொற்றாளர்கள் ஒப்பீட்டளவில் குறைந்தநிலையில் இருந்தபோது மேலதீக குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் சுகாதார பணியாளர்களை பணிக்கு அமர்த்தல் ,கள மருத்துவமனைகளை அமைத்தல் ,

பொது விருந்து மண்டபங்களில் மருத்துவ படுக்கைகளை நிறுவுதல் போன்ற செயற்பாடுகளை அதிகாரிகள் எடுத்திருந்தபோதும் இம்முறை அவர்கள் தவறிவிட்டனர்.

புகைப்பட மூலம்: AP

கடந்த வருடத்தில் கடைப்பிடித்த நடவடிக்கைகளை நீண்டகால நோக்கின் அடிப்படையில் அதிகாரிகள் கவனத்திற்கொண்டு செயற்படவில்லை என்கிறார்

புனேயிலுள்ள இந்தியாவின் விஞ்ஞானக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் நோய்த்தடுப்பு குறித்த ஆய்வில் ஈடுபடும் டொக்டர் வினிதா பேல்.

ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தி அவற்றின் கொள்ளளவை விசாலப்படுத்துதல் வைரஸை இனங்காணும் தொற்றுநோயில்

நிபுணர்களை மேலும் சேர்த்துக்கொள்ளல் ஆகிய ஆலோசனைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

கடந்தாண்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சரிவடைந்ததும் கைவிட்ட பல நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க அதிகாரிகள் கடுமையான முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.

ஒருவருடத்திற்கு முன்னர் மருத்துவபாவனைக்கான ஒக்ஸிஜன் பற்றாக்குறையை இந்தியா தவிர்த்துக்கொண்டமைக்கு கைத்தொழில் தொழித்துறை ஒக்ஸிஜன்

உற்பத்தியை மருத்துவ பாவனைக்கான உற்பத்தியாக மாற்றியதன் மூலம் தவிர்த்துக்கொண்டது.

அடுத்து என்ன ?

போதுமான எண்ணிக்கையான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டு நோயாளர்கள் அதிக எண்ணிக்கையில் பரவலுக்கு உள்ளாவதைத் தடுக்கும் வரையில் இந்தியா

அதன் சுகாதார கட்டமைப்பு மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு பாரிய சவாலை எதிர்கொள்ளப்போகின்றது.


இந்தியா உலகில் மிகப் பெரும் தடுப்பூசி உற்பத்தியாளராக இருப்பது ஒருவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆனால் உள்நாட்டிலுள்ளவர்களுக்கு முன்னுரிமையளிப்பதற்காக கடந்த மார்ச் மாதத்தில் இலங்கை உட்பட பலநாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதியை

இடைநிறுத்தியிருந்தபோதும் போதிய விரைவாக தடுப்பூசியை தயாரிப்பு நிறுவனத்தால் உற்பத்திசெய்யமுடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

 

மத்திய அரசாங்கம் மறுக்கின்றபோதும் பல மாநில அரசாங்கள் தமக்கு போதியளவு தடுப்பூசி கிடைக்கவில்லை பற்றாக்குறை காணப்படுகின்றது எனக் குற்றஞ்சாட்டியுள்ளன.

45 வயதிற்கும் அதிகமானவர்களுக்கு என்ற நிலையில் இருந்து வளர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துவதாக கடந்த திங்கட்கிழமை இந்தியா அறிவித்திருந்தது.

 

இதன்படி ஏறத்தாழ 900 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றும் பாரிய அபிலாஷையை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சனத்தொகையானது ஒட்டுமொத்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சனத்தொகையை விடவும் அதிகமானது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

“தடுப்பூசி ஏற்றுவதே தீவிர பரவலைத்தடுப்பதற்கான ஒரே வழி “எனக் குறிப்பிடும் பொது சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ரெட்டி ஆனால் தடுப்பூசி ஏற்றும் வேகமும் அது கிடைக்கப்பெறும் அளவுமே அதனைத் தீர்மானிக்கும் எனக் கூறுகின்றார்.

AP செய்திச் சேவையில் வெளியான இந்த ஆக்கத்தை தமிழாக்கம் செய்தவர் அருண் ஆரோக்கியநாதன்