ஐ.நா.வின் தீர்மானம் : இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது!

0
254
Article Top Ad

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறதுசர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதிப் பிராந்தியப் பணிப்பாளர் தினுஷிகா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் தீர்மானம் வலியுறுத்துகிறது.

இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் இருந்து எழுவது உட்பட, பரந்த அளவிலான மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு நிபுணர் பொறிமுறையை நிறுவுவதற்கான சிவில் சமூகத்தின் கோரிக்கைகளுக்கு அந்த சபை பதிலளிக்கத் தவறிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்