பிரியமாலியுடன் நம்மாளுக்கு தொடர்பா?

0
130
Article Top Ad

தமக்கோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ திலினி பிரியமாலியுடன் தொடர்பில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் விடுதலைக்காக தாம் உழைத்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் குற்றச்சாட்டு பொய்யானது எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, திலினி பிரியமாலியை விடுவிப்பதற்காக தாம் பொலிஸாரை அழைத்தது ஏன் என குற்றஞ்சாட்டியுள்ளது முற்றிலும் பொய்யானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.