உலக Mrs. World அழகி பட்டத்தை தானாக திருப்பிக் கையளித்தார் கரலின் ஜுரி

0
178
Article Top Ad

திருமதி இலங்கை அழகுராணிப் போட்டியின் போது இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து தனது உலக திருமதி அழகுராணிப் பட்டத்தை திருப்பிக் கையளிப்பதாக கரலின் ஜுரி அறிவித்துள்ளார்.

தானாக தனக்கு யார் மீதும் தனக்கு தனிப்பட்ட கோபம் இருக்கவில்லை எனவும் எந்த நிகழ்ச்சி நிரலையும் கொண்டிருக்கவில்லை எனவும் தமக்கு திருமதி இலங்கை அழகுராணிப் போட்டியில் பங்கெடுத்த அனைவரும் விசேடமானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் நியாயமான வாய்ப்புக்கள் இருக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் தான் ஆரம்பமுதலே கூறியதாகவும்

ஆனாலும் தனது கோரிக்கைகள் செவி மடுக்கப்படாததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 4ம் திகதி நடைபெற்ற

திருமதி இலங்கை அழகுராணிப்போட்டிக்கு முதல்நாள் நடுவர் குழாமில் இருந்து வெளியேறியதாகவும் கரலின் ஜுரி தெரிவித்துள்ளார்.

தாம் எப்போதும் விழுமியங்களுக்கு அமைய நடப்பவர் எனவும் தனது நியாயமான கோரிக்கைகள் செவிமடுக்கப்படாமையால் தனது உலக திருமதி அழகு ராணி பட்டத்தை திரும்பக் கையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அனைத்திற்கும் மேலாக ஒரு பெண்ணிற்கு நியாயமான வாய்ப்புக் கிடைப்பதே முக்கியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.