இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படும்- ஜனாதிபதி கோட்டாபயவுடனான சந்திப்பையடுத்து சீனப்பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

0
356
Article Top Ad

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனப்பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெய்கிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வருகைதந்த சீனப்பாதுகாப்பு அமைச்சர் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்தபோது ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ . ஜயசுந்தரவும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகேயும் வரவேற்றனர்.

ஜனாதிபதியுடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுவடைந்துள்ளதாகவும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான சீனத்தூதுவர் சீ ஷெங்கொக்கும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார். இலங்கையில் இருந்த நாளை காலை சீனப்பாதுகாப்பு அமைச்சர் புறப்பட்டுச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.