அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய பதவிக்கு சமந்தா பவர்; உறுதிப்படுத்திய செனற்சபை

0
362
Article Top Ad

அமெரிக்க அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் ஒன்றான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் நிர்வாக இயக்குநர் USAID Administrator  என்ற சமந்தா பவரின் நியமனத்தை அமெரிக்க செனற் நேற்றையதினம் உறுதிப்படுத்தியுள்ளது.

செனற் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவரது நியமனத்திற்கு ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக 26 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 42 மேலதீக வாக்குகளால் அவரது நியமனம் உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த ஜனவரியில்  ஜனாதிபதி ஜோ பைடன், சமந்தா பவரை பரிந்துரைத்த போது

” மனசாட்சி மற்றும் தார்மீக தெளிவின் உலக புகழ்பெற்ற குரல் – அனைத்து மக்களின் கெளரவத்திற்கும் மனித நேயத்திற்கும் துணை நிற்க சர்வதேச  அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் நிர்வாக இயக்குநர் பதவியைப் பயன்படுத்துவார் ‘எனத் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவிவகித்த போது இலங்கைக்கு பெரும் தலையிடியாக இருந்தவர் என்று கூறப்பட்டவர்  சமந்தா பவர்.

கல்வியாளரும் புலியுட்ஸர் விருது வென்ற எழுத்தாளருமான சமந்தா பவர் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் முதலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள முக்கிய பதவியை வகித்தபோது இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலியுறுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

அதன் பின்னர் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் என்ற முக்கிய பதவியை அவர் வகித்திருந்தார்.