இராவணனை தன்னகப்படுத்தும் மற்றுமொரு முனைப்பில் இலங்கை!

0
291
Article Top Ad

இராமாயணத்தில் இராவணனை வட இந்தியர்கள் அரக்கனாக அசூரனான சித்தரித்தாலும் தமிழர்களால் பெரும் சிவபக்தனான நல்மனம் கொண்ட, வீரம்பொருந்திருந்திய மன்னனாக நோக்கப்படுபவன் இராவணன்.

ஆனால் இலங்கையில் சிங்களவர்களோ இராவணன் தமக்கு சொந்தமான அரசன், சிங்களவர்களின் வீரத்திற்கும் விவேகத்திற்குமான வரலாற்றுச் சான்று என்ற வகையில் உரிமைகோரல்கள் உருவகப்படுத்தல்கள் இடம்பெற்றுவருகின்றன.

இலங்கைத் தொலைக்காட்சிகளில் இராவணனை சிங்கள மன்னாக சித்தரிக்கும் தொலைக்காட்சித் தொடர்களும் ஒளிபரப்பாகின்றன.

இந்த நிலையில் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இராவண மன்னன் பற்றி ஆராய்வதற்கான முனைப்பில் உத்தியோகபூர்வமாக இறங்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட பாராளுமுன்ற உறுப்பினர் புத்திக பத்திரண ‘ இராவண மன்னனை பற்றி முறைப்படி ஆராயும் கற்கையை’

மேற்கொள்வது குறித்து பாராளுமன்றத்தில் தனி நபர் பிரேரணையொன்றை முன்வைத்து அதற்கான அனுமதியைக் கோரியிருந்தார்.

இராவண மன்னனைப் பற்றிய கற்கையை நிபுணர் குழுவொன்றினால் முன்னெடுப்பதன் வாயிலாக இலங்கை வரலாற்றின் மறைக்கப்பட்ட ஒரு காலப்பகுதியைப் பற்றிய தகவல்களை வெளிக்கொண்டுவருவதற்கும்

இந்த நாட்டை மேம்படுத்துவதற்காக அவர் கொண்டிருந்த அறிவுதொடர்பாக கண்டறிவதற்குமான முயற்சியை எடுக்க முடியும் என அந்த தனிநபர் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் இராவணன் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வமாக பத்திரிகைகளிலும் விளம்பரங்களைப் பிரசுரித்திருந்தது.

கடந்தவருடம் பிரசுரிக்கப்பட்ட செய்தி இதோ…

 

இராவணன் ஆதிக்கம் செலுத்திய விமானத்தடங்களைத் தேடி ஆராய்ச்சியில் இறங்கியுள்ள இலங்கை அரசாங்கம்

‘உலகில் முதன்முதலில் விமானத்தை இயக்கியவன் எங்கள் பேரரசன் ராவணன் தான்’ என்று கூறியுள்ள இலங்கை அரசு இதை நிரூபிக்க மிகப்பெரிய ஆய்வில் களமிறங்கப் போவதாகவும் அறிவித்து உள்ளது.

இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு பொது மக்களிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரசு இலங்கை மன்னனான இராவணன் மற்றும் நாட்டின் விமான போக்குவரத்து வரலாறு குறித்து விரிவான ஆராய்ச்சி நடத்த விரும்புவதாகவும்

இராவண மன்னன் மற்றும் இப்போது இழந்த வான்வழி பாதைகளில் பண்டைய ஆதிக்கம் குறித்த ஆராய்ச்சி திட்டத்தைத் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை ஆரம்பிக்கவுள்ளது.

5000 ஆண்டுகளுக்கு முன்பு இராவணன் விமானத்தில் பறந்து விட்டதாகவும், உலகின் முதல் விமானி என்றும் இலங்கை நம்புகிற நிலையில் பண்டைய காலகட்டத்தில் பறக்கப் பயன்படும் முறைகளைக் கண்டறிய நாடு இப்போது ஆர்வமாக உள்ளது

என்றும் தெரிவித்து ஆராய்ச்சியின் முதல் கட்டமாக, இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் பிற வரலாற்று உள்ளடக்கங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

விமானத்தைப் பறக்க விட்ட முதலாவது ஆள் இராவணன் என்பதை நிரூபிக்க அரசாங்கத்திற்கு மறுக்கமுடியாத உண்மைகள் இருப்பதாகவும் இராவணன் ஒரு

மேதை, அவர் தான் முதலில் பறந்தார், அவர் ஒரு விமானியாக இருந்தார் என்றும் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது ஐதீக கதை அல்ல,இது ஒரு உண்மை என்றும் இது குறித்து விரிவான ஆராய்ச்சி இருக்க வேண்டும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை தாங்கள் நிரூபிப்போம் என்றும் விமான போக்குவரத்து அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இராமாயணத்தைப் பொறுத்தவரை, விஸ்வகர்மா நிர்மாணித்த “புஸ்பக” என்ற விமானத்தைப் இராவணன் பயன்படுத்தினான் என்றும் இதிகாசத்தின் பிரகாரம்

சீதையைக் கடத்திச் சென்றபோது இராவணன் விமானத்தைப் பயன்படுத்தியிருந்தான் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே இந்த முயற்சிக்கு பங்களிக்க விரும்பும் எவரும் இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களை மின்னஞ்சல் மூலம் [email protected] அல்லது ஜூலை 31 க்கு முன் 076-6317110 என்ற எண்ணுக்கு

தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

வடமொழிப் புலவர் வால்மீகி இயற்றிய இதிகாசமான ராமாயணத்தின் முக்கியமான கதாபாத்திரம் ராவணன். இலங்கை மட்டுமல்லாமல் மூவுலகையும் அரசாண்ட பேரரசன் ஆவான்.

தன் தங்கை சூர்ப்பணகையின் மூக்கை லட்சுமணன் அறுத்ததற்குப் பழிவாங்குவதற்கு புஷ்பக விமானத்தில் புறப்பட்ட ராவணன் சீதையைக் கவர்ந்து வந்து இலங்கையில் உள்ள அசோகவனத்தில் சிறை வைத்துவிடுவான்.

இந்தியாவில் பலர் ராவணனை அசுரனாகக் கருதிவந்தாலும் அவன் பலராலும் நாயகனாக வணங்கப்படுகிறான். இந்தியாவுக்கு ராவணன் வில்லனாக இருந்தாலும் இலங்கை தங்கள் நாட்டின் ஹீரோவாக போற்றி வருகிறது.

அதன் காரணமாக புஷ்பக விமானத்தை மேற்கோள்காட்டி, உலகிலேயே முதன்முதலில் விமானத்தை இயக்கியவன் எங்கள் பேரரசன் ராவணன் என்று கூறியுள்ளது இலங்கை அரசு.

சிங்கள அரசு இலங்கையில் தமிழ் மொழி பேசும் இந்து சிறுபான்மை மக்களைக் கடுமையாகவே நசுக்கி வந்தாலும் சிவ பக்தனான ராவணனுக்கு மட்டும் புகழாரம் சூட்டி வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாடு ஒன்றில் ‘ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானத்தை இயக்கிய பேரரசன்’ என்று புகழாரம் சூட்டியது இலங்கை. அது மட்டுமல்லாமல்இ கடந்த ஆண்டு இலங்கை அரசு ஏவிய முதல் செயற்கைக்கோளுக்கும் ‘ராவணன் – 1’ என்று பெயரைச் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

இராவணன். இந்த ஒற்றைப் பெயர் அத்தனை ஈர்ப்புசக்தி கொண்டது. இதை யாரும் மறுக்கமுடியாது.

ஆனால், அந்த காலத்திலேயே விமானத்தை வைத்திருந்தான் இராவணன் என்கிறது இராமாயணம். அதற்கு புஷ்பக விமானம் என்ற பெயரையும் சொல்கிறது. ஒருவேளை இது கற்பனையாகக் கூட இருக்கலாம்.

ஆனால் அப்படி பறக்க முடியும் என்ற கற்பனையை உருவாக்கும் அளவிற்கு ஆதித் தமிழர்கள் தொழில்நுட்பம் நிறைந்த அறிவோடு இருந்திருக்கிறார்கள் என்றால் அதை நாம் நிச்சயம் மெச்சிக் கொள்ள வேண்டும்.