2 1/2 கோடியிலிருந்து 1 கோடிக்கு கீழாக குறைக்கப்பட்ட இலங்கை வீரர்களது சம்பளம்: கிரிக்கட் நிர்வாகத்துடன் வீரர்கள் போர்க்கொடி!

0
332
Article Top Ad

பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ற் தொடருக்கு முன்னதாக இலங்கைக் கிரிக்கட் வீரர்களின் சம்பளம் கிட்டத்தட்ட 200 %ல் குறைக்கப்பட்டதன் காரணமாக வீரர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஐலண்ட் பத்திரிகையின் தகவலின் படி முன்னைய ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை அணியின் ஒப்பந்தப்பட்டியலில் முதன்நிலையிலுள்ள வீரர்கள் வருடாந்த 130, 000 அமெரிக்க டொலர்களைப் பெற்றனர்.

அதாவது இலங்கை நாணயத்தில் இரண்டரைக் கோடி ரூபாவை சம்பளமாக பெற்றனர்.

ஆனால் அண்மையில் இடம்பெற்ற பெரும் சம்பள வெட்டை அடுத்து அவர்களது சம்பளம் 45,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 9 மில்லியன் இலங்கை ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 200% வெட்டாக மதிப்பிடப்படுகின்றது.

இதனைத்தவிர புதிய சம்பளத்திட்டத்தில் சிரேஷ்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மேலதீக கொடுப்பனவும் நீக்கப்பட்டுள்ளது .

முன்னைய திட்டத்தின் கீழ் 20ற்கு மேற்பட்ட டெஸ்ற் போட்டிகளில் விளையாடியவர்களுக்கு மேலதீகமாக 500 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும். 40 போட்டிகளில் விளையாடியவர்களுக்கு 750 அமெரிக்க டொலர்களும் 60 போட்டிகளுக்கு மேல் விளையாடியவர்களுக்கு 1000 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும் .

ஒருவீரர் 80 போட்டிகளுக்கு மேல் விளையாடியிருந்தால் அவருக்கு 2000 அமெரிக்க டொலர்கள் மேலதீகமாக ஒவ்வொரு போட்டிக்கும் வழங்கப்படும்.

இந்த மேலதீகக் கொடுப்பனவை இல்லாமல் செய்தமை சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கட் வீரர்களின் வழக்கறிஞர்கள் தற்போது நிர்வாகத்தினருடன் சம்பள விவகாரம் தொடர்பான நகர்வுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ற் போட்டிகளை அடுத்து இந்தவிடயம் தொடர்பாக கிரிக்கட் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.