கொரோனாவால் திணறும் இந்தியா: கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் பத்துலட்சத்தை தாண்டிய தொற்றாளர்கள்

0
211
Article Top Ad

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. சுனாமி அலை என விபரிக்கும் வகையில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் இந்தியாவில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை பத்துலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு சுகாதார அமைச்சர் வெளியிடப்பட்ட தரவுகளில் கடைசி 24 மணிநேரத்தில் அதாவது ஒரேநாளில் புதிதாக 3 இலட்சத்து 86 ஆயிரத்து 888 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 87 இலட்சத்து 54 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் ஒரு கோடியே 53 இலட்சத்து 73 ஆயிரத்து 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 31 இலட்சத்து 72 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெறுபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

அதேநேரம் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 501 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 8 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.