இந்தியாவில் ஒரே நாளில் 400,000 தாண்டிய கொரோனா தொற்றாளர்கள் : கவலைதரும் உலக சாதனை தொடர்கிறது

0
252
Article Top Ad

கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது முதலாக ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தொற்றாளர்கள் பதிவான கவலைதரும் உலக சாதனையை தொடர்ந்தும் இந்தியா முறியடித்து வருகின்றது.

விடைபெற்ற 24 மணிநேரத்தில் 400 000அதிகமானவர்கள் இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 4,01,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டள்ளதாவது, ‘கடந்த 24 மணி நேரத்தில் 4,01, 993 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,91,64,969 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நேற்று, ஒரே நாளில் 3523 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,11,853 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை 1,56,84, 406பேர், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 32,68,710 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.