கொரோனாவால் 1000ற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பலி

0
294
Article Top Ad
கடந்த மாதம் கொரோனாவிற்கு பலியான இந்திய ஊடகவியலாளர் சஞ்சான் பெல் சவுஹான். இவர் Asia Journalism Fellowship பின் அங்கத்தவராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

உலகில் கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக கடந்த ஒராண்டு காலப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளதான அதிர்ச்சிகரமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு மார்ச் 1ம்திகதி முதலான காலப்பகுதியில் 74 நாடுகளைச் சேர்ந்த 1,060ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒவ்வொரு நாளும் குறைந்தபட்ட சராசரியாக 2 ஊடகவியலாளர் பலியாகியுள்ளனர் . அதில் 2021ம் ஆண்டு மார்ச் மாதமே ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் மிக மோசமான மாதமாக இருந்துள்ளது.

இந்த மாதத்தில் ஆகக்குறைந்து 93 ஊடகவியலாளர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

பிரேஸில் நாட்டிலேயே கொரோனாவிற்கு அதிகமான ஊடகவியலாளர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளனர். அங்கு ஆகக்குறைந்தபட்சம் 172 ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

தென் அமெரிக்கக் கண்டத்திலேயே அதிகளவான ஊடகவியலாளர்கள் கொரோனாவிற்கு இரையாகியுள்ளனர். அங்கு 600ற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது